என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரியல் எஸ்டேட் அதிபர்"
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முகமது தாகிரிடம், புறம்போக்கு நிலம் தொடர்பாக சென்னை துரைப்பாக்கத்தில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிரச்சினை முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி உள்ளனர். அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்களையும் பறித்துள்ளனர். இது தொடர்பாக முகமது தாகிர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சேர்ந்த 21 வயது பெண் கடந்த 2015-ம் ஆண்டில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி அருகே உள்ள கடைக்கு அடிக்கடி அவர் சென்று வந்தார்.
அப்போது ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் (37) என்பவர் அந்த மாணவிக்கு அறிமுகமானார்.
பின்னர் ஒரு நாள் ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் எனக்கு பிறந்தநாள் அதற்காக உனக்கு நான் விருந்து கொடுக்கிறேன் என்று கூறி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு காரில் அழைத்துச் சென்றார். காரில் போகும்போது அந்த மாணவியிடம ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதை அவர் விரிவாக எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த மாணவியிடம் உனது வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இவ்வாறாக 4 வருடமாக அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் அந்த மாணவி இரண்டு முறை கர்ப்பம் அடைந்தார். ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து அந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்தார்.
மேலும் தனது நண்பர்களுடன் நீ அனுசரித்து செல்ல வேண்டும் என்று அந்த மாணவியை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் மாணவியின் தந்தை இதுகுறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர் இதே போன்று பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? ஆபாச படங்கள் உள்ளதா? என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் உன்னைப் போன்று பல பெண்களை நான் சீரழித்து உள்ளேன் என்று கூறியுள்ளார் அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூரை சேர்ந்தவர் நீதிமோகன் (வயது 52). ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர். இவர் கடந்த 9-ந்தேதி மோட்டார் சைக்கிளில் தனது உதவியாளர் ராஜேந்திரன் என்பவருடன் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். பிடாரி கோவில் தெரு அருகே சென்றபோது அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள், நீதிமோகனை குண்டுகட்டாக தூக்கி கடத்தி சென்றனர்.
இதுகுறித்து ராஜேந்திரன், திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நீதிமோகனை கடத்திய கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கடத்தப்பட்ட நீதிமோகன் மாத தவணை திட்டத்தில் நிலம் வழங்குவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களால், நீதிமோகன் கடத்தப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே நீதிமோகனை விடுவிக்க கடத்தி சென்றவர்கள் ரூ.10 கோடி கேட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது கும்பகோணம் சாக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நீதிமோகன் அடைத்து வைக்கப் பட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் அங்கு வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், நீதிமோகனை அந்த வீட்டிலேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் சாக்கோட்டையில் உள்ள வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நீதிமோகனை நேற்று தனிப்படை போலீசார் மீட்டு, திருவாரூர் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கோட்டூரை சேர்ந்த வெங்கடாச்சலம், ஜான்கென்னடி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் வெங்கடாச்சலம், கோட்டூர் அருகே குருவாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நீதிமோகனிடம் கமிஷன் அடிப்படையில் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார்.
இதனால் திருவாரூர், கோட்டூர் பகுதிகளில் தவணை முறையில் பணத்தை வசூலித்து நீதிமோகனிடம் ஆசிரியர் வெங்கடாச்சலம் வழங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.7 கோடி வரை அவர் கொடுத்துள்ளார்.
ஆனால் நீதி மோகன், நிலத்தை வழங்காமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் வெங்கடாச்சலத்திடம் புகார் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடாச்சலம், கூலிப்படையினருடன் நீதிமோகனை காரில் கடத்தியது தெரிய வந்தது.
இந்த வழக்கில் மேலும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன்பாளையம் ஈ.பி.ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஏழுமலை தனது குடும்பத்துடன் கடந்த 17-ந் தேதி பழனி முருகன் கோவிலுக்கு சென்றார்.
நேற்று முன்தினம் ஏழுமலையின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், ஏழுமலைக்கு போன் செய்து உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஏழுமலை தனது குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று கைரேகைகளை சேகரித்தனர். திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நேற்று ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர் அறையில் சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவின் கழுத்தை அறுத்தார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தடுக்க முயன்றனர்.
ஆனால் அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டியதால் அவர்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து சென்று விட்டனர். அதன் பிறகு அந்த நபர் ரவிராஜாவின் மார்பு, கால் என பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து பழனி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. கேமராவில் பதிவான அவரது படங்களை ஆய்வு செய்தனர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த சந்துரு என தெரிய வந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் ரவிராஜாவிடம் டிரைவராக வேலை பார்த்துள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் சந்துருவை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இதில் ஏற்பட்ட பகை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது.
இதனிடையே படுகாயம் அடைந்த ரவிராஜா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய சந்துருவை தாராபுரம் சோதனைச் சாவடியில் காருடன் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பழனி போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்